/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கட்சி கொடி கம்பம் விழுந்து பெண் படுகாயம் கட்சி கொடி கம்பம் விழுந்து பெண் படுகாயம்
கட்சி கொடி கம்பம் விழுந்து பெண் படுகாயம்
கட்சி கொடி கம்பம் விழுந்து பெண் படுகாயம்
கட்சி கொடி கம்பம் விழுந்து பெண் படுகாயம்
ADDED : மார் 14, 2025 07:44 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பஸ் நிலையத்தில் கட்சி கொடி கம்பம் விழுந்து, பெண் காயம் அடைந்தார்.
திருக்கோவிலுார் பஸ் நிலையத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பஸ்கள் வெளியே செல்லும் இடத்தில் கட்சி கொடி கம்பங்கள் அதிகம் உள்ளன. நேற்று மதியம் 1:00 மணி அளவில், அங்கு வைக்கப்பட்டிருந்த மக்கள் நீதி மையம் கட்சி கொடிக்கம்பம், திடீரென சாய்ந்தது. இந்த கம்பம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அய்தராபாக்கத்தை சேர்ந்த அய்யனார் மனைவி சரசு, 55; என்பவர் தலையில் விழுந்தது. இதனால் பலத்த காயமடைந்தவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு இருக்கும் அனைத்து கட்சி கொடிக்கம்பங்களையும் அகற்ற வருவாய்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.