/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ஊராட்சி தலைவர் கூட்டமைப்பு கூட்டம் ஊராட்சி தலைவர் கூட்டமைப்பு கூட்டம்
ஊராட்சி தலைவர் கூட்டமைப்பு கூட்டம்
ஊராட்சி தலைவர் கூட்டமைப்பு கூட்டம்
ஊராட்சி தலைவர் கூட்டமைப்பு கூட்டம்
ADDED : ஜூன் 16, 2024 06:48 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாவட்ட அளவிலான அனைத்து ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, கூட்டமைப்பு தலைவர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். செயலாளர் அய்யாதுரை, பொருளாளர் சின்னசாமி முன்னிலை வகித்தார். ரிஷிவந்தியம் தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் முத்துசாமி வரவேற்றார். 250 ஊராட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், ஊராட்சி மன்றங்களை கலைப்பது இந்திய அரசியலமைப்பு சட்ட பிரிவு 73 மற்றும் 243ன் படி எதிரானது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலுார், செங்கல்பட்டு, தென்காசி உட்பட 9 மாவட்டங்களைச் சேர்ந்த ஊராட்சி தலைவர்களின் பதவி காலம் 2026 அக்டோபர் 19ம் தேதி வரை உள்ளது. அப்போதுதான் 5 ஆண்டு பதவிக்காலம் முடிகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 ஊராட்சி தலைவர்கள் அனைவரும் தமிழக முதல்வர், தமிழக கவர்னர், தேர்தல் ஆணையர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர்களை சந்தித்து கோரிக்கை மனு கொடுப்பது. மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளாத பட்சத்தில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து பரிகாரம் தேடுவது.
நியாயம் கிடைக்காதபட்சத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.