/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கல்வராயன்மலையில் அதிகரிக்கும் கள்ளச்சாராயம்: போலீசார் மெத்தனம் கல்வராயன்மலையில் அதிகரிக்கும் கள்ளச்சாராயம்: போலீசார் மெத்தனம்
கல்வராயன்மலையில் அதிகரிக்கும் கள்ளச்சாராயம்: போலீசார் மெத்தனம்
கல்வராயன்மலையில் அதிகரிக்கும் கள்ளச்சாராயம்: போலீசார் மெத்தனம்
கல்வராயன்மலையில் அதிகரிக்கும் கள்ளச்சாராயம்: போலீசார் மெத்தனம்
ADDED : ஜூன் 18, 2024 05:23 AM
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. மலைகளின் நடுவே கள்ளச்சாராயம் காய்ச்சபடும் இடங்களை போலீசார் கடும் சிரமங்களுக்கு இடையே கண்டுபிடித்து அழிக்கின்றனர். இடத்தினை போலீசார் அறிந்து விட்டால், அதனைத் தொடர்ந்து வேறு இடங்களில் சாராயம் காய்ச்சப்படுகிறது.
மலை பகுதியில் காய்ச்சப்படும் கள்ளச்சாராயம் பெரும்பாலும், சுற்று வட்டார சமவெளி பகுதிகளுக்கு கடத்தப்பட்டு கிராமப்புறங்களில் விற்பனை செய்யப்படுகிறது. சமவெளியில் சாராயம் விற்பனை கட்டுபடுத்தினால், மலையில் சாராயம் காய்ச்சுவது குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. விற்பனையை ஒழித்தால், உற்பத்தி தானாக குறையும் என்ற முறையை போலீசார் பின்பற்றினால் போதும். ஆனால் போலீசார் அதற்கான நடவடிக்கை எடுப்பதில்லை என்ற புகாரும் உள்ளது.
பெரும்பாலான கிராமங்களில் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்ந்து நடக்கிறது. மலையில் சில இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது தொழிற்சாலை போல் செயல்படுகிறது. சட்டம் ஒழுங்கு போலீசார், மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார், தனிப்படை போலீசார் மற்றும் வனத்துறை அலுவலர்கள் அவ்வப்போது மலை பகுதியில் சோதனை மேற்கொண்டு ஆயிரக்கணக்கான லிட்டர் சாராய ஊறல்களை அழிக்கின்றனர். இருப்பினும் கள்ளச்சாராயம் காய்ச்சுவது தொடர்ந்து நீடித்து வருகிறது. கள்ளச்சாராயம் காயச்சுவதை கட்டுபடுத்துவதில் போலீசார் திணறி வருகின்றனர்.
கள்ளச்சாராயம் காய்சசுவதற்கு தேவையான வெல்லம் உள்ளிட்ட மூலப்பொருட்கள் மற்றும் அதிகளவிலான பிளாஸ்டிக் பாரல்கள் போன்றவை வாகனங்கள் மூலம் மலைப்பகுதிக்கு எவ்வித கட்டுபாடுகளும் இல்லாமல் கடத்தி செல்லப்படுகிறது. கள்ளச்சாராயம் காய்ச்சுவது மற்றும் விற்பனைக்கு மாமூல் பெற்றுக் கொண்டு போலீசார் சிலர் உதவியாக இருக்கின்றனர். காவல் துறை அதிகாரிகள் தீவிர தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு மலையில் சாராயம் காய்ச்சுவதை தடுக்க வேண்டும்.