/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கள்ளக்குறிச்சியில் அதிகாரிகள் அலட்சியத்தால் முக்கிய சாலையில் தொடரும் ஆக்கிரமிப்புகள் கள்ளக்குறிச்சியில் அதிகாரிகள் அலட்சியத்தால் முக்கிய சாலையில் தொடரும் ஆக்கிரமிப்புகள்
கள்ளக்குறிச்சியில் அதிகாரிகள் அலட்சியத்தால் முக்கிய சாலையில் தொடரும் ஆக்கிரமிப்புகள்
கள்ளக்குறிச்சியில் அதிகாரிகள் அலட்சியத்தால் முக்கிய சாலையில் தொடரும் ஆக்கிரமிப்புகள்
கள்ளக்குறிச்சியில் அதிகாரிகள் அலட்சியத்தால் முக்கிய சாலையில் தொடரும் ஆக்கிரமிப்புகள்
ADDED : ஜூன் 18, 2024 05:24 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகரின் முக்கிய சாலைகள் மற்றும் வீதிகள் ஆக்கிரமிப்பு காரணமாக போக்குவரத்து நெரிசலில் பொதுமக்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி நகரின் முக்கிய சாலைகள், வீதிகளில் நிரந்தர ஆக்கிரமிப்புகள் அதிகரித்து போக்குவரத்து நெரிசலுக்கு பெயர்போன ஊராக விளங்கி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
நகராட்சி பகுதியில் கடை வீதி, அக்ரகார தெரு, குளத்துமேட்டு தெரு, மார்க்கெட், பஸ் நிலையம் மற்றும் நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கிய தெருக்கள் உட்பட நகராட்சி பகுதிகளிலும் தற்காலிக கடைக்காரர்கள் மற்றும் வாகன நிறுத்தம் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது.
ஆக்கிரமிப்புகளின் காரணமாக சாலைகள் சுருங்கி வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். சாலையோர வணிக நிறுவனங்கள் கடைகளின் முன்பாக தற்காலிக கடைக்காரர்களுக்கு உள் வாடகைக்கு விட்டு ஆக்கிரமித்து வருகின்றனர்.
இதனால் கள்ளக்குறிச்சி நகரம் முழுதும் ஆக்கிரமிப்பின் தலைநகரமாக விளங்கி வருகிறது.
அதிகாரிகள் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் நகரின் முக்கிய சாலைகள், வீதிகளில் நோ என்ட்ரி, நோ பார்க்கிங் என போர்டுகள் காட்சிப் பொருளாக உள்ளது. இதனை யாரும் கண்டுகொள்வதே இல்லை, இத்துடன் ஆட்டோக்காரர்களும் வரிசையாக வாகனங்களை நிறுத்திவைத்து ஆள் பிடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனை போக்குவரத்து போலீசாரும் கண்டு கொள்வதில்லை.
கள்ளக்குறிச்சி நகரின் முக்கிய சாலைகளான சேலம் சாலையில் நகராட்சி அலுவலகம் வரையிலும், தியாகதுருகம் சாலையில் கோமுகி ஆற்றுப்பாலம் வரையும், கச்சிராயபாளையம் சாலையில் தீயணைப்பு நிலையம் வரையும், கச்சேரி சாலையில் கோட்டை மேடு வரையும் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும்.
மேலும் கடை வீதி, அக்ரகார தெரு, குளத்துமேட்டு தெரு, மார்க்கெட், பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் வாகன நிறுத்தம் மற்றும் தற்காலிக கடைக்காரர்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, பராமரித்திட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் சேலம், தியாகதுருகம் சாலைகளை விஸ்தீரனம் செய்து சென்டர் மீடியன் அமைத்திட, நடவடிக்கை எடுக்க வேண்டும்.