ADDED : ஜூன் 18, 2024 05:23 AM
கள்ளக்குறிச்சி: கனியாமூரில் புள்ளித்தாள் விளையாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சின்னசேலம் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கனியாமூர் அய்யனார் கோவில் அருகே, அதே பகுதியை சேர்ந்த பொன்னுசாமி மகன் பெரியசாமி,69; ராமலிங்கம் மகன் பெருமாள்,65; மணிகண்டன் மகன் கவியரசன்,26; சக்திவேல் மகன் சிவக்குமார்,26; ஆகியோர் புள்ளித்தாள் விளையாடியது தெரிந்தது.
தொடர்ந்து, 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 40 புள்ளித்தாள்கள் மற்றும் ரூ.160 பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.