/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ திருக்கோவிலுார் ஞானானந்தா தபோவனத்தில் கும்பாபிஷேகம் திருக்கோவிலுார் ஞானானந்தா தபோவனத்தில் கும்பாபிஷேகம்
திருக்கோவிலுார் ஞானானந்தா தபோவனத்தில் கும்பாபிஷேகம்
திருக்கோவிலுார் ஞானானந்தா தபோவனத்தில் கும்பாபிஷேகம்
திருக்கோவிலுார் ஞானானந்தா தபோவனத்தில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 16, 2024 10:21 PM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் ஞானானந்தா தபோவனத்தில், ராஜகோபுரம் மற்றும் மூலமூர்த்திகளுக்கு கும்பாபிேஷகம் நடந்தது.
திருக்கோவிலுார் அடுத்த குடமுருட்டி, ஞானானந்தகிரி சுவாமிகள் தபோவனம் உள்ளது. இங்குள்ள அதிஷ்டான அருளாலயம், மணிமண்டபம், மூர்த்திகள் சன்னதி, ராஜகோபுரம் உள்ளிட்டவை புனரமைக்கப்பட்டு, 14 ஆண்டுகளுக்குப்பின், நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவையொட்டி, கடந்த 12ம் தேதி யாகசாலை பூஜை துவங்கியது.
தொடர்ந்து, தினமும் உபன்யாசம், பஜனை நடந்த நிலையில், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு 6ம் கால யாகசாலை பூஜை, நவாவரண பூஜை, பூர்ணாகுதி, கடம் புறப்பாடாகி 7:00 மணிக்கு மேல் ராஜகோபுரம் மற்றும் மூர்த்திகளின் மூலகலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவிற்கான ஏற்பாடு களை அறக்கட்டளை செயலாளர் அமர்நாத், அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்திருந்தனர். சிங்கப்பூர் பக்தர் வெங்கடேஷ் நாராயணசுவாமி உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.