/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பேராசிரியர்களுக்கு பாராட்டு விழா பேராசிரியர்களுக்கு பாராட்டு விழா
ADDED : ஜூன் 16, 2024 10:22 PM

கள்ளக்குறிச்சி : நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் ஆர்.கே.எஸ்., கல்லுாரி தமிழக அளவில் 28வது இடத்தை பிடித்துள்ளதைத் தொடர்ந்து கல்லுாரி நிர்வாகம் சார்பில் பேராசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்வி நிறுவனங்களின் தலைவர் மகுடமுடி தலைமை தாங்கினார். செயலாளர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். பொருளாளர் மணிவண்ணன், துணைத் தலைவர் திருஞானசம்பந்தம் வாழ்த்திப் பேசினார். கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் வரவேற்றார்.
கல்லுாரி மாணவர்கள் உடனடியாக வேலை வாய்ப்பு பயன்பெறும் வகையில், தமிழகத்தில் உள்ள 766 கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் கல்லுாரி வாரியாக வேலை வாய்ப்பில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை குறித்த தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
அதில், ஆர்.கே.எஸ்., கல்லுாரி தமிழக அளவில் 28வது இடத்தை பிடித்துள்ளது.
இதற்கு உறுதுணையாக இருந்த முதல்வர், துணை முதல்வர், வேலைவாய்ப்பு அலுவலர், துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர்களுக்கு கல்லுாரி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. துணை முதல்வர் ஜான்விக்டர் நன்றி கூறினார்.