/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ குட்கா பொருட்கள் விற்பனை; 9 பேர் மீது வழக்குப் பதிவு குட்கா பொருட்கள் விற்பனை; 9 பேர் மீது வழக்குப் பதிவு
குட்கா பொருட்கள் விற்பனை; 9 பேர் மீது வழக்குப் பதிவு
குட்கா பொருட்கள் விற்பனை; 9 பேர் மீது வழக்குப் பதிவு
குட்கா பொருட்கள் விற்பனை; 9 பேர் மீது வழக்குப் பதிவு
ADDED : ஜூன் 16, 2024 10:23 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பகுதியில் குட்கா பொருட்கள் விற்ற 9 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் நிலைய பகுதியில் குட்கா பொருட்கள் விற்பனை தொடர்பாக நேற்று முன்தினம் பல்வேறு கடைகளில் போலீசார் சோதனை செய்தனர். அதில், கள்ளக்குறிச்சி அடுத்த மோ.வன்னஞ்சூர் கோவிந்தன், மணிகண்டன், சின்னசேலம் பாஸ்கர், மேல்நாரியப்பனுார் முனியன், தியாகதுருகம் அடுத்த திம்மலை மணிவேல் மனைவி தீபா, கணங்கூர் சேர்ந்த முருகேசன், மாதவச்சேரி சேர்ந்த பழனி, தோட்டப்பாடி சின்னபொண்ணு, சேராப்பட்டு சேகர் ஆகியோரது கடைகளில் குட்கா பொருட்கள் விற்றது தெரியவந்தது.
இதனையடுத்து 9 பேர் மீதும் அந்தந்த காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.