/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தென்கீரனுார் கிராமத்தில் கோமாரி தடுப்பூசி முகாம் தென்கீரனுார் கிராமத்தில் கோமாரி தடுப்பூசி முகாம்
தென்கீரனுார் கிராமத்தில் கோமாரி தடுப்பூசி முகாம்
தென்கீரனுார் கிராமத்தில் கோமாரி தடுப்பூசி முகாம்
தென்கீரனுார் கிராமத்தில் கோமாரி தடுப்பூசி முகாம்
ADDED : ஜூன் 12, 2024 07:17 AM

கள்ளக்குறிச்சி : தென்கீரனுார் கிராமத்தில் கோமாரி தடுப்பூசி முகாம் நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுார் நிகழ்ச்சியில் நடந்த கோமாரி தடுப்பூசி முகாமிற்கு, ஊராட்சி தலைவர் வெண்ணிலா ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். மண்டல இணை இயக்குநர் அழகுவேல், உதவி இயக்குநர் (பொ) சுதா முன்னிலை வகித்தனர். கால்நடை உதவி மருத்துவர் சுகம் வரவேற்றார்.
முகாமில், கால்நடை உதவி மருத்துவர்கள் நிர்மலா, அண்ணாதுரை, முருகு, ஜனார்த்தனன், ஆய்வாளர்கள் சக்திவேல், சிங்காரவேல், பராமரிப்பு உதவியாளர்கள் பெரியசாமி, சுமதி, வெங்கடேசன், தேன்மொழி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் வரும் ஜூலை மாதம் 10ம் தேதி வரை கோமாரி தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.