/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பிரியாணி கடையில் தகராறு செய்தவர் மீது வழக்கு பிரியாணி கடையில் தகராறு செய்தவர் மீது வழக்கு
பிரியாணி கடையில் தகராறு செய்தவர் மீது வழக்கு
பிரியாணி கடையில் தகராறு செய்தவர் மீது வழக்கு
பிரியாணி கடையில் தகராறு செய்தவர் மீது வழக்கு
ADDED : ஜூன் 12, 2024 07:18 AM
திருக்கோவிலூர் : மணலூர்பேட்டை அருகே பிரியாணி கடையில் ஏற்பட்ட சண்டையில் கடை ஊழியரை தாக்கியவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மணலூர்பேட்டை அடுத்த சொரையப்பட்டு கிராமத்தில் குமார் என்பவருக்கு சொந்தமான பிரியாணி கடை உள்ளது. இதில் மணலூர்பேட்டையைச் சேர்ந்த சவுரிமுத்து மகன் அந்தோணிகுருஸ், 28; வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு 9:30 மணி அளவில் அவரது கடைக்கு சென்ற சொரையப்பட்டை சேர்ந்த ராஜாமணி மகன் பன்னீர்செல்வம், 24; சாப்பாடு கேட்டுள்ளார். தீர்ந்து விட்டது எனக் கூறியதால், ஆத்திரமடைந்த பன்னீர்செல்வம் காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து அந்தோணிகுருஸ் கழுத்தில் வெட்டியதில் காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து அந்தோணி குரூஸ் கொடுத்த புகாரின் பேரில் மணலூர்பேட்டை போலீசார் பன்னீர்செல்வத்தின் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.