/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தியாகதுருகத்தில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் தியாகதுருகத்தில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
தியாகதுருகத்தில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
தியாகதுருகத்தில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
தியாகதுருகத்தில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 11, 2024 11:27 PM

தியாகதுருகம், : தியாகதுருகம் பி.டி.ஓ., அலுவலகம் எதிரில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாற்றுதிறனாளி மற்றும் பாதுகாப்பு உரிமை சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வேலு, மாவட்ட செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய தலைவர் வைத்தியலிங்கம் முன்னிலை வகித்தனர். இதில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் லோக்சபா தேர்தலுக்கு பிறகு நடைமுறைப்படுத்தாமல் உள்ள தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். அதில் மாற்றுதிறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பி.டி.ஓ., துரைமுருகன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஒன்றியத்தில் நடக்கும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்க அரசு உத்தரவிட்ட உடன் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்துஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.