/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பழங்குடியினர் நல இயக்குநர் கல்வராயன்மலையில் ஆய்வு பழங்குடியினர் நல இயக்குநர் கல்வராயன்மலையில் ஆய்வு
பழங்குடியினர் நல இயக்குநர் கல்வராயன்மலையில் ஆய்வு
பழங்குடியினர் நல இயக்குநர் கல்வராயன்மலையில் ஆய்வு
பழங்குடியினர் நல இயக்குநர் கல்வராயன்மலையில் ஆய்வு
ADDED : ஜூலை 30, 2024 11:21 PM
கள்ளக்குறிச்சி : சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கல்வராயன்மலை பகுதியில் பழங்குடியினர் நல இயக்குநர் ஆய்வு செய்தார்.
கல்வராயன்மலை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கிடைக்கப்பெறும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன்பேரில், கடந்த சில தினங்களுக்கு முன் கல்வராயன்மலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், முழுமையான விபரங்கள் இல்லை எனவும், பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
அதன்பேரில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் அண்ணாதுரை, கலெக்டர் பிரசாந்த் மற்றும் அலுவலர்கள் கல்வராயன்மலையில் உள்ள சின்னதிருப்பதி, மேல்பாச்சேரி, புதுார், எருக்கம்பட்டு, கெடார், பட்டிவளவு, புளுவப்பாடி, இன்னாடு உள்ளிட்ட கிராமங்களில் ஆய்வு செய்தனர். அங்குள்ள மக்களை சந்தித்து கிராமங்களில் உள்ள சாலை வசதி, கல்வித்தரம், உணவு, மருத்துவம் குறித்தும் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். ஆய்வு அறிக்கை தயார் செய்து ஓரிரு நாட்களில் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளனர்.