ADDED : ஜூலை 30, 2024 11:22 PM
சங்கராபுரம் : சங்கராபுரத்தில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் விதி மீறிய 36 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் நேற்று முன்தினம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது இரு சக்கர வாகனத்தில் ெஹல்மெட் அணியாமல் சென்றது, 3 பேர் அமர்ந்து சென்றது, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் ஏதும் இன்றி சென்றவர்கள், காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றவர்கள் என, 36 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.