/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சாலையை ஆக்கிரமித்து மீன் வியாபாரம்; வாகன ஓட்டிகள் கடும் அவதி சாலையை ஆக்கிரமித்து மீன் வியாபாரம்; வாகன ஓட்டிகள் கடும் அவதி
சாலையை ஆக்கிரமித்து மீன் வியாபாரம்; வாகன ஓட்டிகள் கடும் அவதி
சாலையை ஆக்கிரமித்து மீன் வியாபாரம்; வாகன ஓட்டிகள் கடும் அவதி
சாலையை ஆக்கிரமித்து மீன் வியாபாரம்; வாகன ஓட்டிகள் கடும் அவதி
ADDED : ஜூலை 30, 2024 11:20 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மந்தைவெளி பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டில் சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்வதால், வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக உள்ள மந்தைவெளியில் மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது. மீன்களை அங்கேயே வெட்டி சுத்தம் செய்து விற்கின்றனர். கழிவுகள் சாலையோர கழிவு நீர் கால்வாயில் கொட்டுவதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. கடையில் போதுமான இடமில்லாததால், வியாபாரிகள் சாலை பகுதியை ஆக்கிரமித்து விற்பனை செய்கின்றனர்.
இதனால் இப்பகுதியில் உள்ள கோவில்கள், காய்கறி மார்க்கெட், மசூதி, பல்வேறு வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு வரும் பொதுமக்கள் வழியின்றி தவித்து வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகம் இருப்பதால், இப்பகுதியில் போக்குவரத்து பாதித்து வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.