/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பெண் சாராய வியாபாரி: தடுப்புக்காவலில் கைது பெண் சாராய வியாபாரி: தடுப்புக்காவலில் கைது
பெண் சாராய வியாபாரி: தடுப்புக்காவலில் கைது
பெண் சாராய வியாபாரி: தடுப்புக்காவலில் கைது
பெண் சாராய வியாபாரி: தடுப்புக்காவலில் கைது
ADDED : ஜூலை 19, 2024 05:10 AM

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அடுத்த க.அலம்பலத்தை சேர்ந்தவர் இளையான் மனைவி கீதா,41.
சாராயம் விற்ற இவரை கடந்த ஜூன் 11ம் தேதி கச்சிராயபாளையம் போலீசார் கைது செய்தனர். கீதா மீது சாராயம் விற்பனை செய்தது தொடர்பாக பல்வேறு வழக்குகள் உள்ளது. இவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, கள்ளக்குறிச்சி எஸ்.பி., ரஜத்சதுர்வேதி பரிந்துரையின் பேரில், தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டார். அதற்கான உத்தரவை கடலுார் சிறையில் இருந்த கீதாவிடம் போலீசார் வழங்கி, அவரை வேலுார் பெண்கள் சிறையில் அடைத்தனர்.