/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஜூலை 19, 2024 05:10 AM

தியாகதுருகம்:தியாகதுருகம் ஒன்றியம், பொரசக்குறிச்சி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.
முகாமிற்கு டி.ஆர்.ஓ., சத்திய நாராயணன் தலைமை தாங்கினார். மலையரசன் எம்.பி., மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், ஒன்றிய சேர்மன் தாமோதரன், துணை சேர்மன் நெடுஞ்செழியன், ஆத்மா திட்டகுழு தலைவர் அண்ணாதுரை, தாசில்தார் கமலக்கண்ணன், பி.டி.ஓ.,க்கள் துரைமுருகன், ஜெகந்நாதன், ஊராட்சி தலைவர் லட்சுமி, மாவட்ட கவுன்சிலர் பழனியம்மாள், ஒன்றிய கவுன்சிலர் பச்சையம்மாள் முன்னிலை வகித்தனர்.
வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., திட்டத்தை துவக்கி வைத்து, பேசினார். அப்பகுதி மக்கள் தங்கள் கோரிக்கை மனுவை அதிகாரியிடம் கொடுத்தனர்.
இதில், தனி பிரிவு தாசில்தார் நளினிதாஸ், துணை பி.டி.ஓ.,க்கள் தினகர்பாபு, தயாபரன், பிரபுதாஸ், மகாலட்சுமி, ஜெயசுதா, செல்வராஜ், பொறியாளர்கள், திரு, மணிகண்டன், ராமர், பழனிவேல், தி.மு.க., செயற்குழு உறுப்பினர் எத்திராஜ், இளைஞர் அணி துணை அமைப்பாளர் மணி, தலைவர்கள் கூட்டமைப்பு சங்கத் தலைவர் இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.