/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா விழா தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா விழா
தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா விழா
தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா விழா
தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா விழா
ADDED : ஜூலை 19, 2024 03:47 PM

சங்கராபுரம்: தமிழக அரசின் சிறந்த பள்ளியாக தேர்வு பெற்று, காமராஜர் விருதும், 75 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் பெற்ற புதுபாலப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசனுக்கு பாராட்டு விழா நடந்தது.
சங்கராபுரம் மோட்டார் வாகன பழுது பார்போர் நல சங்கம் சார்பில் நடந்த விழாவிற்கு, சங்கத் தலைவர் திருவேங்கடம் தலைமை தாங்கினார். பொருளாளர் சரவணன், ஓய்வூதியர் சங்கத் தலைவர் கலியமுர்த்தி முன்னிலை வகித்தனர்.
காமராஜர் விருது பெற்ற தலைமையாசிரியர் வெங்கடேசனுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன் பள்ளியில் பொது தேர்வில் தமிழில் முதல் 3 இடம் பிடித்த மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.
சங்க செயலாளர் விஜயகுமார், வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன், துணைத் தலைவர் செல்வராஜ் பங்கேற்றனர்.