ADDED : ஜூலை 19, 2024 03:50 PM

சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.
டி.ஆர்.ஓ., சத்யநாராயணன் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் திலகவதி நாகராஜன், ஆத்மா குழு தலைவர் ஆறுமுகம், சங்கராபுரம் பேரூராட்சி சேர்மன் ரோஜாரமணி, சங்கராபுரம் தாசில்தார் சசிகலா, சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். அ.பாண்டலம் ஊராட்சி தலைவர் பாப்பாத்தி நடராஜன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினர் உதயசூரியன் எம்.எல்.ஏ., பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
முகாமில் பி.டிஓ.,க்கள் மோகன்குமார், செல்வபோதகர், ஒன்றிய சேர்மன்கள் கள்ளக்குறிச்சி அலமேலு ஆறுமுகம், கல்வராயன்மலை சந்திரன், மற்றும் சங்கராபுரம் சுற்றியுள்ள கிராம மக்களிடமிருந்து 1418 மனுக்கள் பெறப்பட்டன.