/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பயிர் மகசூல் போட்டி விவசாயிக்கு பாராட்டு பயிர் மகசூல் போட்டி விவசாயிக்கு பாராட்டு
பயிர் மகசூல் போட்டி விவசாயிக்கு பாராட்டு
பயிர் மகசூல் போட்டி விவசாயிக்கு பாராட்டு
பயிர் மகசூல் போட்டி விவசாயிக்கு பாராட்டு
ADDED : ஜூலை 16, 2024 11:33 PM

கள்ளக்குறிச்சி : சிறுவங்கூர் கிராமத்தில் வேளாண் துறை சார்பில் நடந்த பயிர் மகசூல் போட்டியில் வென்ற விவசாயிக்கு பாராட்டு விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு பயிர் மகசூல் போட்டி சிறுவங்கூர் கிராமத்தில் வேளாண் துறை சார்பில் நடந்தது.
சிறுவங்கூர் கிராமத்தை சார்ந்த விவசாயி தண்டபாணி, தனது கம்பு விதை பண்ணை வயலில் தனசக்தி என்ற ரகம் பயிரிட்டு இருந்தார். அதனை கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன் தலைமையிலான குழுவினர் அறுவடை செய்து ஆய்வு நடத்தினர்.
இதில் அதிகப்படியான மகசூல் எடுத்ததாக, விவசாயி தண்டபாணிக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.
வேளாண் துணை இயக்குநர் பெரியசாமி, உதவி இயக்குநர் (பொ) வனிதா, வேளாண்மை அலுவலர் பாபு, உதவி விதை அலுவலர் வெங்கடேசன், உதவி வேளாண் அலுவலர் பழனிசாமி மற்றும் விவசாய பிரதிநிதி அம்மாசி ஆகியோர் கொண்ட ஆய்வுக் குழுவினர் போட்டிகளை நடத்தினர்.