/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ காலை உணவு திட்டம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு காலை உணவு திட்டம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
காலை உணவு திட்டம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
காலை உணவு திட்டம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
காலை உணவு திட்டம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஜூலை 16, 2024 11:35 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த அகரக்கோட்டாலம் ஆர்.சி., நடுநிலைப்பள்ளி யில் காலை உணவுத்திட்டம் துவக்க நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, உதயசூரியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம் முன்னிலை வகித்தார். ஆலய பங்கு தந்தை ஆரோக்கியதாஸ் வரவேற்றார்.
இதையடுத்து, மாணவ, மாணவிகளுக்கு உதயசூரியன் எம்.எல்.ஏ., காலை சிற்றுண்டி வழங்கி, அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.
ஒன்றிய செயலாளர் அரவிந்தன், ஒன்றிய கவுன்சிலர் பிரியாராஜாராம், பன்னீர்செல்வம், பூங்கலியன், மாவட்ட கவுன்சிலர் அருள், ஊராட்சி தலைவர்கள் ஏழுமலை, வெங்கடேசன், ரவி, தலைமை ஆசிரியர் ஜோசப், தி.மு.க., ஒன்றிய பொருளாளர் பாலசுப்ரமணியன், கந்தசாமி, முருகேசன், நாராயணசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.