ADDED : ஜூலை 16, 2024 11:36 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்கம் சார்பில் குதிரைச்சந்தல் அரசு பள்ளியில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
ரோட்டரி சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மண்டல துணை ஆளுனர் ராமலிங்கம், தேர்வு ஆளுனர் செந்தில், தலைமை ஆசிரியர் மணிமாறன் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் செல்வராஜ் வரவேற்றார்.
மாணவர்களுக்கு விளையாட்டு, ஓவியம், கட்டுரை, திருக்குறள் ஒப்புவித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு ரோட்டரி இயக்குனர் அம்பேத்கர் திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கினார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் 122 மரக்கன்றுகள் நடப்பட்டது.