/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ஒருவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு ஒருவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
ஒருவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
ஒருவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
ஒருவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 07, 2024 04:34 AM
திருக்கோவிலூர்: திருப்பாலபந்தலில் பால் வாங்க முந்தி சென்றவரை தாக்கிய மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
திருக்கோவிலூர் அடுத்த திருப்பாலபந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகன் பார்த்திபன், 35; கடந்த 1ம் தேதி இரவு 8:00 மணி அளவில் பால் ஸ்டோருக்கு பால் வாங்குவதற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அதே ஊரைச் சேர்ந்த அசோக் மகன் மணிகண்டன், கோவிந்தன் மகன் மகேந்திரன், காசி மகன் கதிர்வேல் ஆகியோரும் நடந்து சென்றனர். அவர்களை முந்தி கொண்டு பார்த்திபன் சென்றதால், ஆத்திரமடைந்த மூவரும் பார்த்திபனை சரமாரியாக தாக்கினர்.
இதுகுறித்து பார்த்திபன் கொடுத்த புகாரின் பேரில் மூன்று பேர் மீதும் திருப்பாலபந்தல் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.