/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ துாங்கி கொண்டிருந்த கர்ப்பணியிடம் இரண்டு சவரன் செயின் பறிப்பு துாங்கி கொண்டிருந்த கர்ப்பணியிடம் இரண்டு சவரன் செயின் பறிப்பு
துாங்கி கொண்டிருந்த கர்ப்பணியிடம் இரண்டு சவரன் செயின் பறிப்பு
துாங்கி கொண்டிருந்த கர்ப்பணியிடம் இரண்டு சவரன் செயின் பறிப்பு
துாங்கி கொண்டிருந்த கர்ப்பணியிடம் இரண்டு சவரன் செயின் பறிப்பு
ADDED : ஜூலை 07, 2024 04:34 AM
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே தூங்கிக் கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணின் கழுத்தில் இருந்து 2 சவரன் தாலி செயினை பறித்து சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை தாலுகா ஆசனூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார், 30; பினாயில் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி கிருஷ்ணவேணி, 25; இவர் 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். இரவு மழை பெய்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் வீட்டின் வெளிப்புற கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது அருண்குமாரின் தாய் தேவகி, தேவகியின் சின்னம்மா ராஜகுமாரி ஆகியோர் வீட்டிற்கு வெளியே தூங்கி கொண்டு இருந்தனர்.இதனை நோட்ட மிட்ட இரு மர்ம நபர்கள் நேற்று அதிகாலை 2 மணியளவில் வீட்டிற்குள் புகுந்த தூங்கிக் கொண்டிருந்த கிருஷ்ணவேணியின் கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் தாலி செயினை பறித்தனர்.
இதில் அதிர்ச்சியடைந்த கிருஷ்ணவேணி சத்தம் போடவே அருகில் படுத்திருந்த அருண்குமார் மர்ம நபர்களை பிடிக்க முயன்ற போது, மர்ம நபர்கள் அருண்குமாரை தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த அவரை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைககாக அனுப்பி வைக்கப்பட்டார்.
சம்பவம் குறித்து எடைக்கல் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.