/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ விழிப்புணர்வு பிரசாரம்: மாணவர்களுக்கு வரவேற்பு விழிப்புணர்வு பிரசாரம்: மாணவர்களுக்கு வரவேற்பு
விழிப்புணர்வு பிரசாரம்: மாணவர்களுக்கு வரவேற்பு
விழிப்புணர்வு பிரசாரம்: மாணவர்களுக்கு வரவேற்பு
விழிப்புணர்வு பிரசாரம்: மாணவர்களுக்கு வரவேற்பு
ADDED : ஜூன் 03, 2024 06:28 AM

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் போதை விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்ட ஸ்கேட்டிங் மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது என்பதை வலியுறுத்தி திருச்சியில் இருந்து சென்னை நோக்கி 40க்கும் மேற்பட்ட ஸ்கேட்டிங் மாணவர்கள் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.
இந்த பிரசார ஸ்கேட்டிங் மாணவர்கள் உளுந்துார்பேட்டை வந்தனர். அவர்களை மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., வரவேற்று சத்துப் பொருட்கள் வழங்கி வாழ்த்தி பேசினார். தொடர்ந்து, ஸ்கேட்டிங் மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு இளைஞர்கள் அடிமையாகக் கூடாது என்பது குறித்து பேசினர்.
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிவராஜ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பத்மநாபன், ஆசிரியர் சூரியகுமார், நகராட்சி கவுன்சிலர் செல்வகுமாரி உட்பட பலர் பங்கேற்றனர்.