/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பள்ளி மாணவர்கள் விபூதி, சந்தனம், குங்குமம் வைக்க தடை என வதந்தி பரப்பினால் போராட்டம் வெடிக்கும் பள்ளி மாணவர்கள் விபூதி, சந்தனம், குங்குமம் வைக்க தடை என வதந்தி பரப்பினால் போராட்டம் வெடிக்கும்
பள்ளி மாணவர்கள் விபூதி, சந்தனம், குங்குமம் வைக்க தடை என வதந்தி பரப்பினால் போராட்டம் வெடிக்கும்
பள்ளி மாணவர்கள் விபூதி, சந்தனம், குங்குமம் வைக்க தடை என வதந்தி பரப்பினால் போராட்டம் வெடிக்கும்
பள்ளி மாணவர்கள் விபூதி, சந்தனம், குங்குமம் வைக்க தடை என வதந்தி பரப்பினால் போராட்டம் வெடிக்கும்
ADDED : ஜூன் 26, 2024 02:37 AM

கள்ளக்குறிச்சி : பள்ளி மாணவர்களிடையே விபூதி, சந்தனம், குங்குமம் அணிந்து வர தடை எனும் வதந்தி பரப்பினால் ஹிந்து முன்னணி சார்பில் போராட்டம் வெடிக்கும் என மாநில தலைவர் எச்சரித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையை கள்ளக் குறிச்சி மாவட்ட ஹிந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் சக்திவேல், கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கலாபனிடம் வழங்கினர்.
அந்த அறிக்கையில் முன்னாள் நீதிபதி சந்துரு பரிந்துரைப்படி, பள்ளிகளில் மாண வர்கள் விபூதி, சந்தனம், குங்குமம் ஆகியவை அணிந்துவர தடை எனும் செய்தி பரவி வருகிறது. அது அவரது பரிந்துரைதான், முடிவு அல்ல, உத்தரவும் அல்ல.
இதை பயன்படுத்தி பல சமூக விரோதிகள் பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் பொட்டு வைத்து வரக்கூடாது என்ற வதந்தியை பரப்பி வருகின்றனர். இதனால் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பெற்றோர்களும், மாணவர்களும் குழப்பம் கொள்ள வேண்டாம். இதையும் மீறி தவறான செய்திகளை பரப்பி பள்ளிகளில் ஹிந்து மாணவ, மாணவிகள் பொட்டு வைத்து வரக்கூடாது என கட்டுப்பாடு விதித்தால், அந்த பள்ளி முன்பு, அந்த பள்ளிக்கு உட்பட்ட கல்வி அலுவலர் அலுவலகம் முன்பும், ஹிந்து முன்னணி போராட்டம் நடத்தி, மாணவர்களுக்கு உறுதுணையாக நிற்கும் என தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டள்ளது.
நிகழ்ச்சியில், ஹிந்து முன்னணி கள்ளக்குறிச்சி மாவட்ட பொருளாளர் அருண், செயலாளர் பாலகிருஷ்ணன், துணை தலைவர் முத்தையன், ஒன்றிய பொருப்பாளர் செல்லதுரை உடனிருந்தனர்.