/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மணிமுக்தா அணையில் மீன்பிடி திருவிழா மணிமுக்தா அணையில் மீன்பிடி திருவிழா
மணிமுக்தா அணையில் மீன்பிடி திருவிழா
மணிமுக்தா அணையில் மீன்பிடி திருவிழா
மணிமுக்தா அணையில் மீன்பிடி திருவிழா
ADDED : ஜூன் 26, 2024 02:33 AM

கள்ளக்குறிச்சி : மணிமுக்தா அணையில் நடந்த மீன்பிடி திருவிழாவில், 40 டன் எடை கொண்ட மீன்களை பொதுமக்கள் பிடித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சூளாங்குறிச்சியில் 36 அடி உயர கொள்ளளவு கொண்ட மணிமுக்தா அணை உள்ளது. வடகிழக்கு பருவ மழையின் அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு சில மாதங்களுக்கு பிறகு, விவசாயத்திற்காக பாசன கால்வாய் வழியாக திறக்கப்படும்.
அவ்வாறு தேக்கிவைக்கப்படும் தண்ணீரில், குத்தகைதாரர்கள் சார்பில் மீன்குஞ்சுகளை விட்டு பராமரிப்பர். மீன்கள் நன்கு வளர்ந்ததும் பிடித்து விற்பனை செய்வர். விற்பனை முடிந்த பிறகு மீன் பிடி திருவிழா நடைபெறும்.
அதன்படி, மணிமுக்தா அணையில் மீன்பிடி திருவிழா நேற்று காலை 5 மணியளவில் தொடங்கியது. இதில், சூளாங்குறிச்சி, சூ.ராயபுரம், அகரகோட்டாலம், வாணியந்தல், ரங்கநாதபுரம், பழையசிறுவங்கூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிர கணக்கான பொதுமக்கள் அணையில் இறங்கி மீன்களை பிடித்தனர்.
கண்ணாடி கெண்டை, கட்லா, ரோகு, கெளுத்தி, விரால் உட்பட பல்வேறு வகையான பெரிய அளவிலான மீன்களை பிடித்து, சாக்கு பைகளில் அள்ளி சென்றனர். சுமார் 40 டன் எடை கொண்ட மீன்களை ஒன்று கூடி பிடித்து சென்றதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். சிலர் பிடித்த மீன்களை அப்பகுதியிலேயே விற்பனை செய்தனர்.