/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ நண்பரை கத்தியால் குத்திய வாலிபருக்கு வலை நண்பரை கத்தியால் குத்திய வாலிபருக்கு வலை
நண்பரை கத்தியால் குத்திய வாலிபருக்கு வலை
நண்பரை கத்தியால் குத்திய வாலிபருக்கு வலை
நண்பரை கத்தியால் குத்திய வாலிபருக்கு வலை
ADDED : ஜூன் 26, 2024 02:38 AM
தியாகதுருகம் : தியாகதுருகம் அருகே குடிபோதையில் நண்பரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தியாகதுருகம் அடுத்த பாணயங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கலியபெருமாள் மகன் வெங்கடாஜலபதி, 24; ஆறுமுகம் மகன் விஜய் ஆனந்த், 24; இருவரும் நண்பர்கள்.
கடந்த 24 ம் தேதி இரவு 8 மணிக்கு இருவரும் மது அருந்தி உள்ளனர். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டு சண்டையாக மாறியது.
இதில் ஆத்திரம் அடைந்த விஜய் ஆனந்த் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெங்கடா ஜலபதி மார்பில் குத்திவிட்டு தப்பிச் சென்றார்.
படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சேர்த்தனர்.
புகாரின் பேரில் தியாக துருகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய விஜய் ஆனந்தை தேடி வருகின்றனர்.