/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ 12 எஸ்.பி., கள் தலைமையில் 2,000 போலீசார் குவிப்பு 12 எஸ்.பி., கள் தலைமையில் 2,000 போலீசார் குவிப்பு
12 எஸ்.பி., கள் தலைமையில் 2,000 போலீசார் குவிப்பு
12 எஸ்.பி., கள் தலைமையில் 2,000 போலீசார் குவிப்பு
12 எஸ்.பி., கள் தலைமையில் 2,000 போலீசார் குவிப்பு
ADDED : ஜூன் 20, 2024 08:13 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் இறந்த சம்பவத்தையொட்டி, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 12 எஸ்.பி.,கள் உட்பட 2,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி, தி.மு.க., அமைச்சர் உதயநிதி, பா.ஜ., அண்ணாமலை, காங்., செல்வபெருந்தகை, தே.மு.தி.க., பிரேமலதா மற்றும் சசிகலா உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பலர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மற்றும் கருணாபுரம் பகுதியில் இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரடியாக சந்தித்து ஆறுதல் கூறினர்.
இதனையொட்டி, டி.ஜி.பி., சங்கர் திவால், ஏ.டி.ஜி.பி., அருண், டி.ஐ.ஜி., திஷாமித்தல் மற்றும் 12 மாவட்ட எஸ்.பி.,க்கள் தலைமையில் 2,000க்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு கள்ளக்குறிச்சி கருணாபுரம், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம் உட்பட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.