ADDED : ஜூன் 16, 2024 10:19 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி சப் இன்ஸ் பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, கள்ளக்குறிச்சி ராஜா நகர் பூங்கா அருகே, செல்வம் மகன் மணிகண்டன், 27; முருகன் மகன் ஏழுமலை, 22; ஆகிய இருவரும் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது.
உடன், இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.