/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/செந்நிறத்தில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் மாநகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்யுமா?செந்நிறத்தில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் மாநகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்யுமா?
செந்நிறத்தில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் மாநகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்யுமா?
செந்நிறத்தில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் மாநகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்யுமா?
செந்நிறத்தில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் மாநகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்யுமா?
ADDED : ஜூன் 04, 2024 04:03 AM
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி பகுதியில் ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டத்ல், தனியார் நிறுவனம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் முழுமையாக சுத்தம் செய்யப்படாமல் வினியோகிப்பதாக, மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக தண்ணீரானது அதிக அளவில் கலங்கிய நிலையில், செம்மண் நிறத்தில் வருகிறது. தண்ணீரை வெள்ளை துணியில் வடிகட்டி பார்த்தால், ஒரு குடம் தண்ணீர் பிடித்தாலே வெள்ளைத் துணியில் செந்நிறம் படிகிறது.
தண்ணீரின் துாய்மை மற்றும் சுத்திகரிப்பு குறித்து, மாநகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையினர் ஆய்வு செய்து, சுத்தமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.