/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஓட்டு எண்ணிக்கை; 900 போலீஸ் பாதுகாப்பு ஓட்டு எண்ணிக்கை; 900 போலீஸ் பாதுகாப்பு
ஓட்டு எண்ணிக்கை; 900 போலீஸ் பாதுகாப்பு
ஓட்டு எண்ணிக்கை; 900 போலீஸ் பாதுகாப்பு
ஓட்டு எண்ணிக்கை; 900 போலீஸ் பாதுகாப்பு
ADDED : ஜூன் 04, 2024 04:02 AM
திருப்பூர்,: ஓட்டு எண்ணிக்கை பாதுகாப்பு பணியில், கமிஷனர் தலைமையில், 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று நடக்கிறது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் திருப்பூரில் நேற்று நடந்தது. திருப்பூர் போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு தலைமையில் நடந்தது. பணியில் ஈடுபட உள்ள போலீசார் உள்ளிட்டோருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். கமிஷனர் தலைமையில், இரண்டு துணை கமிஷனர், 13 உதவி கமிஷனர்கள், 38 இன்ஸ்பெக்டர்கள் உள்பட, 900 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மேலும், துணை ராணுவபடையினர், 24 பேர், ஓட்டு எண்ணும் அறையின் வெளிப்புறம், ஸ்ட்ராங் ரூம், ஓட்டு எண்ணும் மெஷின் எடுத்து வருபவருடன் பாதுகாப்பு என, பல பணிகளில் ஈடுபடுகின்றனர். தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள், மருத்துவ குழுவினர் என, பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.