/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வண்டல் மண் எடுத்து சென்ற வாகனங்கள் தடுத்து நிறுத்தம் விவசாயிகள் ஆவேசம்; அதிகாரிகளிடம் வாக்குவாதம் வண்டல் மண் எடுத்து சென்ற வாகனங்கள் தடுத்து நிறுத்தம் விவசாயிகள் ஆவேசம்; அதிகாரிகளிடம் வாக்குவாதம்
வண்டல் மண் எடுத்து சென்ற வாகனங்கள் தடுத்து நிறுத்தம் விவசாயிகள் ஆவேசம்; அதிகாரிகளிடம் வாக்குவாதம்
வண்டல் மண் எடுத்து சென்ற வாகனங்கள் தடுத்து நிறுத்தம் விவசாயிகள் ஆவேசம்; அதிகாரிகளிடம் வாக்குவாதம்
வண்டல் மண் எடுத்து சென்ற வாகனங்கள் தடுத்து நிறுத்தம் விவசாயிகள் ஆவேசம்; அதிகாரிகளிடம் வாக்குவாதம்
ADDED : ஜூன் 04, 2024 04:04 AM
புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் அணை நீர்தேக்க பகுதியில் இருந்து, விவசாய பயன்பாட்டிற்காக இலவசமாக வண்டல் மண் எடுத்துக்கொள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி நேற்று முதல் வாகனங்களில் வண்டல் மண் அள்ளும் பணி துவங்கியது.
நீர்வளத்துறை, வனத்துறை அதிகாரிகள் முன் ஹிட்டாச்சி மற்றும் பொக்லைன் வாகனம் மூலம் டிப்பர் லாரிகளில் வண்டல் மண் எடுக்கப்பட்டது. காராச்சிக்கொரை வன சோதனைச் சாவடி வழியாக வண்டல் மண் எடுத்துச் சென்ற லாரிகளை, வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்து விவசாயிகள் கேட்டபோது, 'அணை நீர்தேக்கப் பகுதியில் வண்டல் மண் எடுக்கும் இடம் வனத்துறைக்கு சொந்தமானது. அப்பகுதியில் மண் எடுக்க அனுமதி இல்லை' என தெரிவித்தனர். இதனால் ஆவேசமடைந்த விவசாயிகள், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் நடராஜ் தலைமையில், வனத்துறையை கண்டித்து வனத்துறை சோதனை சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பவானிசாகர் போலீசார், பவானிசாகர் ரேஞ்சர் சிவகுமார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
'தற்போது வண்டல் மண் எடுக்கும் பகுதியில் மூன்று நாட்கள் மட்டும் எடுத்துக் கொள்ளலாம். அந்த இடம் வனத்துறைக்கு சொந்தமானதா அல்லது நீர்வளத் துறைக்கு சொந்தமானதா? என்பது குறித்து இரண்டு துறை அதிகாரிகளும் ஆய்வு மேற்கொள்வர். இதை தொடர்ந்து வண்டல் மண் எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும்' என தெரிவித்தனர். தகவலறிந்து வந்த பவானிசாகர் எம்.எல்.ஏ., பண்ணாரி, ''வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்த பின், பிரச்னை தொடர்பாக சுமூகமான முடிவு எட்டப்படும்,'' என விவசாயிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கலைந்து சென்றனர்.