/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பஸ் ஸ்டாண்டில் மீண்டும் திருநங்கையர் தொல்லைபஸ் ஸ்டாண்டில் மீண்டும் திருநங்கையர் தொல்லை
பஸ் ஸ்டாண்டில் மீண்டும் திருநங்கையர் தொல்லை
பஸ் ஸ்டாண்டில் மீண்டும் திருநங்கையர் தொல்லை
பஸ் ஸ்டாண்டில் மீண்டும் திருநங்கையர் தொல்லை
ADDED : ஜூன் 07, 2024 12:10 AM
ஈரோடு: ஈரோடு மாநகரில் மத்திய பஸ் ஸ்டாண்ட், ரயில்வே சந்திப்பு, பிரதான சாலைகளின் முக்கிய சந்திப்பு, சிக்னல்களில் இரவு நேரங்களில் நடமாடும் திருநங்கைகளால், பல்வேறு இன்னல்களை சந்திப்பதாக, மக்கள் மத்தியில் ஏற்கனவே புகார் உள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, பஸ் ஸ்டாண்டில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு, தண்ணீர் எடுத்து விடுவதற்காக, மாநகராட்சி இரவு நேர காவலர் ஒருவர் சென்றார்.
அங்கு திருநங்கைகள் சிலர், மது போதையில் தவறான செயல்களில் ஈடுபட்டிருந்தனர். கண்டித்த வாட்ச்மேனை மிரட்டியதுடன், அவரை தாக்கியுள்ளனர். பஸ் ஸ்டாண்டில் உள்ள புறநகர போலீசாருக்கு அவர் தகவல் தந்தார். அங்கு போலீசார் சென்ற நிலையில், திருநங்கைகள் ஓட்டம் பிடித்துள்ளனர். இதுகுறித்து புறநகர் மற்றும் டவுன் போலீசாருக்கு, மாநகராட்சி தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்ட் பகுதியில், போலீசார் இரவு ரோந்தை தொடர்ந்தால் மட்டுமே, திருநங்கையரின் தொல்லை முடிவுக்கு வரும் என்பதும், மக்களின் கோரிக்கையாக உள்ளது.