கொட்டும் மழையில் வெள்ள நீர் அகற்றம்
கொட்டும் மழையில் வெள்ள நீர் அகற்றம்
கொட்டும் மழையில் வெள்ள நீர் அகற்றம்
ADDED : ஜூன் 07, 2024 12:10 AM
வெள்ளகோவில்: வெள்ளகோவில் நகராட்சி பகுதிகளில் நேற்று மாலை கனமழை பெய்தது.
இதனால் கடைவீதி, வீரக்குமாரசாமி கோவில், தாராபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியது. நகராட்சி கமிஷனர் வெங்கடேஷ்வரன் அறிவுறுத்தலின்படி, தேங்கிய மழை நீரை கொட்டும் மழையில் அகற்றும் பணியில், நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். குடிநீர் பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை, மக்கள் சாக்கடையில் வீசுவதால், மழை காலங்களில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, வீதிகளில் கழிவுநீருடன் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பிளாஸ்டிக் பொருட்களை சாக்கடையில் வீசுவதை தவிர்த்தாலே, இதுபோன்ற நிலை ஏற்படாது என்று, சீரமைப்பு பணியில் ஈடுபட்ட, நகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர்.