ADDED : ஜூன் 07, 2024 12:10 AM
* கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் எள், தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது. ஏலத்துக்கு, 19,019 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ, 22.39 ரூபாய் முதல், 31.49 ரூபாய் வரை விலை போனது. கொப்பரை தேங்காய், 443 மூட்டைகள் வரத்தாகின. முதல் தரம் கிலோ, 9௧ ரூபாய் முதல், 95.69 ரூபாய்; இரண்டாம் தரம், 60.19 ரூபாய் முதல், 89.66 ரூபாய்வரை விலை போனது. எள், 210 மூட்டை வரத்தானது. கறுப்பு எள் கிலோ, 123 ரூபாய் முதல், 142 ரூபாய் வரை விலை போனது. இதேபோல் சிவப்பு எள் கிலோ, 119.79 ரூபாய் முதல், 143.89 ரூபாய்; வெள்ளை எள், 135.72 ரூபாய் முதல், 135.72 ரூபாய் வரை விற்றது.
* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலை ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 401 மூட்டை வரத்தானது. ஒரு கிலோ, 72.95 ரூபாய் முதல், 81 ரூபாய் வரை, 10.20 லட்சம் ரூபாய்க்கு விற்றது. இதேபோல் சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 174 மூட்டை நிலக்கடலை வரத்தானது. ஒரு கிலோ, 60.16 ரூபாய் முதல், 78.66 ரூபாய் வரை, 5,313 கிலோ, 3.55 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
* மொடக்குறிச்சி உப ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 21,132 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு கிலோ, 24.36 ரூபாய் முதல், 30.79 ரூபாய் வரை விற்றது. இதேபோல் கொப்பரை ஏலத்துக்கு, 144 மூட்டைகள் வந்தன. முதல் தரம் கிலோ, 86.90 ரூபாய் முதல், 92.16 ரூபாய்; இரண்டாம் தரம், 63.69 ரூபாய் முதல், 84.19 ரூபாய் வரை விற்பனையானது. * கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. ஏலத்தில், கதளி ஒரு கிலோ, 50 ரூபாய், நேந்திரன், 45 ரூபாய்க்கும் விற்றது. பூவன் தார், 620, தேன்வாழை, 710, ரஸ்த்தாளி, 600, பச்சைநாடான், 410, ரொபஸ்டா, 400, செவ்வாழை, 1,050, மொந்தன், 320 ரூபாய்க்கும் விற்பனையானது. விற்பனைக்கு வரத்தான, 4,020 வாழைத்தார்களும், ஒன்பது லட்சம் ரூபாய்க்கு விற்றன.
* கோபி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய் பருப்பு ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், ௧௦௭ மூட்டை வரத்தானது. ஒரு கிலோ, 90 ரூபாய் முதல், 94 ரூபாய் வரை விற்பனையானது. அனைத்து தேங்காய் பருப்பும், 3.85 லட்சம் ரூபாய்க்கு விற்றதாக, சொசைட்டி அலுவலர்கள் தெரிவித்தனர்.