/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அந்தியூர் வாரச்சந்தையில் சுங்க கட்டண பலகை அதிக வாகனங்கள் வரும் வழிக்கு 'அல்வா' அந்தியூர் வாரச்சந்தையில் சுங்க கட்டண பலகை அதிக வாகனங்கள் வரும் வழிக்கு 'அல்வா'
அந்தியூர் வாரச்சந்தையில் சுங்க கட்டண பலகை அதிக வாகனங்கள் வரும் வழிக்கு 'அல்வா'
அந்தியூர் வாரச்சந்தையில் சுங்க கட்டண பலகை அதிக வாகனங்கள் வரும் வழிக்கு 'அல்வா'
அந்தியூர் வாரச்சந்தையில் சுங்க கட்டண பலகை அதிக வாகனங்கள் வரும் வழிக்கு 'அல்வா'
ADDED : ஜூன் 02, 2025 03:58 AM
அந்தியூர்: அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் திங்கட்கிழமை தோறும் காய்-கறி, மளிகை உள்ளிட்ட அத்திாயவசிய பொருட்களுக்கான சந்தை நடக்கிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கால்-நடை சந்தை நடக்கிறது. சந்தையில் வியாபாரிகளிடம், மக்க-ளிடம் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதில் முறைகேடு நடந்ததால், பேரூராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து முறையீடு செய்யப்பட்டு வந்தது. சுங்க கட்டணம் எவ்-வளவு என்பதை அறிவிக்கும் வகையில், நுழைவுவாயிலில் அறி-விப்பு பலகை வைக்கவும் கோரிக்கை விடுத்து வந்தனர். நீண்ட இழுபறிக்கு பின், நேற்று முன்தினம் கிழக்கு, தெற்குப்பகுதி சந்தை நுழைவு வாயிலில் சுங்க கட்டணம் குறித்த பலகை வைக்-கப்பட்டுள்ளது. அதேசமயம் அதிக அளவில் வாகனங்கள் நுழையும் மேற்கு நுழைவாயில் பகுதியில் கட்டண விபர பலகை வைக்கப்படவில்லை.