/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க மக்களுக்கு அழைப்புமுருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க மக்களுக்கு அழைப்பு
முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க மக்களுக்கு அழைப்பு
முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க மக்களுக்கு அழைப்பு
முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க மக்களுக்கு அழைப்பு
ADDED : ஜூன் 02, 2025 03:58 AM
தாராபுரம்: மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க, வீடு வீடாக சென்று, இந்து முன்னணி தொண்டர்கள் அழைப்-பிதழ் வழங்கினர்.
மதுரையில் வரும், 22ல் முருக பக்தர்கள் மாநாடு நடக்கவுள்-ளது. இதற்காக இந்து முன்னணி கோட்ட செயலாளர் கோவிந்-தராஜ் தலைமையில், திருப்பூர் கிழக்கு மாவட்ட மாநாட்டு குழு-வினர், கிராமம், கிராமமாக சென்று, மக்களை பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்து வருகின்றனர். இந்நிலையில் தாராபுரம் நகரில், கொட்டாப்புளி பாளையம் ரோடு, கோட்டைமேடு, உப்புத்துறைபாளையம், மீனாட்சிபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில், நேற்று காலை முதல் மாலை வரை, மக்களை சந்தித்து அழைப்பிதழ் வழங்கினர்.
இதேபோல் மடத்துபாளையத்திலும் அழைப்பிதழ் கொடுத்தனர். இந்நிகழ்வுகளில் பா.ஜ., திருப்பூர் மாவட்ட பொது செயலாளர் சுகுமார், நகர தலைவர் ரங்கநாயகி உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், கலந்து கொண்டனர்.