ADDED : ஜூலை 25, 2024 01:20 AM
ஈரோடு: ஈரோடு, செட்டிபாளையம் சஞ்சய் நகரை சேர்ந்தவர் இளங்கோ, 49, விவசாயி.
நேற்று முன்தினம் இரவு தனது தோட்ட கிணற்று சுவற்றில் அமர்ந்திருந்தார். திடீரென தவறி கிணற்றுக்குள் விழுந்தார். நேற்று காலை அவரது தோட்டத்துக்கு வந்த தொழிலாளர்கள் கிணற்றின் அருகே மொபைல் போன், செருப்பு இருப்பதை பார்த்து சந்தேகம் அடைந்து எட்டி பார்த்தனர். அப்போது இளங்-கோவின் உடல் கிணற்று நீரில் மிதந்தது தெரியவந்தது. ஈரோடு தீயணைப்பு வீரர்கள், கயிறு கட்டி இழுத்து இளங்கோவின் உடலை மேலே கொண்டு வந்தனர். ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.