/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வுகழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு
ADDED : ஜூலை 25, 2024 01:20 AM
ஈரோடு: ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகளில், பாதாள சாக்கடை கழிவு நீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
மாநகராட்-சிக்கு சொந்தமான பீளமேடு என்ற இடத்தில், 18.27 ஏக்கரில், 4.80 ஏக்கர் நிலப்பரப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்-பட்டு செயல்பட்டு வருகிறது.சுத்திகரிப்பு நிலையத்தில் நாளொன்றுக்கு, 50.55 மில்லியன் லிட்டர் கழிவு நீரை சுத்திகரிக்கும் திறன் உள்ளது. ஆனால் தற்-போது நாள் ஒன்றுக்கு, 25 மில்லியன் லிட்டர் கழிவு நீர் மட்டுமே சுத்திகரிப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுத்திகரிப்பு நிலையத்தை மாநகராட்சி கமிஷனர் மனீஷ், அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். அப்போது கழிவு நீர் வரத்து, சுத்திக-ரிப்பு செய்யும் கழிவு நீர் அளவு, சுத்திகரிப்பு செய்த பின் கழிவு நீர் பயன்பாடு உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் கேட்ட-றிந்தார். பின், காளைமாடு சிலை அருகே உள்ள புதிய வணிக வளாகத்தை ஆய்வு செய்தார்.மாநகராட்சி பொறியாளர்கள் விஜயகுமார், சிவகுமார் உடனிருந்-தனர்.