/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/லாரி - கார் மோதி விபத்து; பெண் உட்பட 2 பேர் பலிலாரி - கார் மோதி விபத்து; பெண் உட்பட 2 பேர் பலி
லாரி - கார் மோதி விபத்து; பெண் உட்பட 2 பேர் பலி
லாரி - கார் மோதி விபத்து; பெண் உட்பட 2 பேர் பலி
லாரி - கார் மோதி விபத்து; பெண் உட்பட 2 பேர் பலி
ADDED : ஜூலை 25, 2024 01:20 AM
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே ஆலாம்பாடி சென்னி-மலை கவுண்டன்வலசை சேர்ந்தவர் சிவக்குமார், 28, விவசாயி.
இவர் தனது உறவினர்களான பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க செயலாளராக உள்ள பேபி, 45, அவரது மகள் ரஞ்சனிபிரியா, 26, ஆகியோருடன் திருச்செந்துார் கோவிலுக்கு சென்று விட்டு, காரில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.நாமக்கல் மாவட்டம், தட்டான்குட்டையை சேர்ந்த பெரியசாமி, 56, காரை ஓட்டினார். நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிய-ளவில் ஊதியூர், வரட்டுக்கரை பாலம் பகுதியில் வந்தபோது, தாராபுரம் நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி, கார் மீது மோதி கவிழ்ந்தது. இதில் கார் லாரியின் அடிப்பகுதியில் சிக்கிக் கொண்-டது.காங்கேயம் தீயணைப்பு நிலைய வீரர்கள், இடிபாடுகளில் சிக்கிய-வர்களை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ரஞ்சனிபிரியா, பெரிய-சாமி ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சிவக்குமார், பேபி ஆகியோர் கோவையில் உள்ள தனியார் மருத்-துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஊதியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.