ADDED : ஜூலை 25, 2024 01:20 AM
பவானி: பவானி மேற்கு தெருவை சேர்ந்தவர் பூபதி அங்கமுத்து, 42; நுாற்-பாலை தொழிலாளி.
நேற்று, பவானி பழைய பாலம் அருகில் காவிரியாற்றில் குளிக்க சென்றார். அப்போது, ஆழமான இடத்துக்கு சென்ற பூபதி அங்கமுத்து, ஆற்றில் மூழ்கி இறந்தார். தகவலறிந்த பவானி போலீசார் சம்-பவ இடத்துக்கு சென்று, பிரேதத்தை மீட்டு விசாரித்து வருகின்றனர்.