Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மாணவ, மாணவிகளுக்கு தமிழ் கையெழுத்து போட்டி

மாணவ, மாணவிகளுக்கு தமிழ் கையெழுத்து போட்டி

மாணவ, மாணவிகளுக்கு தமிழ் கையெழுத்து போட்டி

மாணவ, மாணவிகளுக்கு தமிழ் கையெழுத்து போட்டி

ADDED : ஜூலை 25, 2024 01:19 AM


Google News
ஈரோடு: ஈரோட்டில், மாவட்ட அளவிலான தமிழ் கையெழுத்து போட்டி நேற்று மாணவ, மாணவிகளுக்கு நடந்தது.

தமிழக பள்ளி கல்வித்-துறை சார்பில், தமிழ் வளர்ச்சி துறையின் ஆண்டு விழாவை முன்-னிட்டு தமிழ் கையெழுத்து போட்டி பள்ளி அளவில் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு, மாவட்ட அளவிலான போட்டி நேற்று ஈரோடு ப.செ.பார்க் தகைசால் பள்ளியில் நடந்தது. நுாற்-றுக்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 6 முதல் 9ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 10 முதல் பிளஸ் 2 வரை மற்றொரு பிரிவாகவும் போட்டி நடத்தப்-பட்டது. போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு முறையே, 3,000, 2,000, 1,000 ரூபாய் பரிசு வழங்கப்பட உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us