செவ்வாழை தார் ரூ.1,040க்கு விற்பனை
செவ்வாழை தார் ரூ.1,040க்கு விற்பனை
செவ்வாழை தார் ரூ.1,040க்கு விற்பனை
ADDED : ஜூலை 25, 2024 01:19 AM
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்-பனை சங்கத்தில், 4.56 லட்சத்துக்கு செவ்வாழைத்தார்கள் விற்-பனை நடந்தது.
சத்தியமங்கலம், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்-பனை சங்கத்தில் வாழைத்தார் ஏலம் நேற்று முன்தினம் நடை-பெற்றது. நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், 2,303 வாழைத்-தார்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர். ஏலத்தில் கதளி கிலா, 64, நேந்திரன் 41, பூவன் தார், 620, ரஸ்தாளி, 480, தேன்-வாழை, 760, செவ்வாழை, 1,040, ரொபஸ்டா, 810, பச்சைநாடன், 440, மொந்தன், 320 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தம் நான்கு லட்சத்து, 56 ஆயிரத்து 328 ரூபாய்க்கு ஏலம் போனது.