'விவசாயம் பற்றி மட்டும் பேசுங்கள்'
'விவசாயம் பற்றி மட்டும் பேசுங்கள்'
'விவசாயம் பற்றி மட்டும் பேசுங்கள்'
ADDED : ஜூன் 28, 2025 04:13 AM
வேளாண் குறைதீர் நாள் கூட்டத்தில் கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்து பேசியதாவது: நான் புதிதாக பொறுப்பேற்-றுள்ளேன். தேனியில் டி.ஆர்.ஓ.,வாக இருந்தபோது, வேளாண் குறைதீர் கூட்ட பிரச்னைகளை கவனித்துள்ளேன்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் திங்கள் கிழமைகளில் மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் மற்றும் டி.ஆர்.ஓ., குறைதீர் கூட்டம் என பல கூட்டங்கள் நடத்தப்படுகிறது. அங்கு, பஸ் வருவ-தில்லை, பள்ளி பிரச்னை, வங்கி நடைமுறை சிக்கல், தனி பிரச்-னைகளை பேசுங்கள். மாதத்தில் ஒரு நாள் மட்டுமே நடக்கும் வேளாண் குறைதீர் கூட்டத்தில் முற்றிலும் விவசாயம் பற்றி மட்-டுமே பேசுங்கள்.
பிற கோரிக்கைகளை, அதுபோன்ற கூட்டத்தில் வழங்குங்கள். ஒருவர் பேசியதையே மற்றவர்களும் பேசாமல், கருத்தை மட்டும் கூறுங்கள். இங்கு பெறப்படும் மனுக்களுக்கு முறையான விசா-ரணை நடத்தி, தீர்வு காணப்படும். முன்னதாக உரிய பதில் மனு-தாரருக்கு அனுப்பப்படும். இவ்வாறு பேசினார்.