Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/வேறுவேறு உரம் வாங்க சொல்லி கட்டாயப்படுத்தும் உரக்கடைகள்

வேறுவேறு உரம் வாங்க சொல்லி கட்டாயப்படுத்தும் உரக்கடைகள்

வேறுவேறு உரம் வாங்க சொல்லி கட்டாயப்படுத்தும் உரக்கடைகள்

வேறுவேறு உரம் வாங்க சொல்லி கட்டாயப்படுத்தும் உரக்கடைகள்

ADDED : ஜூன் 28, 2025 04:12 AM


Google News
வேளாண் குறைதீர் கூட்டத்தில் ஓடத்துறை விவசாயிகள் சங்க செயலர் நந்தவர்மன் பேசியதாவது:

உரக்கடைகளில் டி.ஏ.பி., உரம் வாங்கினால், வேறு உரம், 700 ரூபாய்க்காவது வாங்க நிர்பந்திக்கின்றனர். மறுத்தால் உரம் தர மறுக் கின்றனர்.

பிற விவசாயிகள்: விவசாயிகளுக்கு லாபம் தரும், அதிக உற்பத்தி கிடைக்கும் ரக நெல் விதை வழங்குங்கள்.

சன்ன ரக விதையை அதிகம் வழங்கி, அதிக உற்பத்தியாகியும், நெல் கொள்முதல் நிலையங்களில் வாங்க மறுக்கின்றனர். இங்கு விற்பனை செய்ய இயலும் ரக விதைகளை வழங்குங்கள்.

தோட்டக்கலை துணை இயக்குனர் குரு சரஸ்வதி: மா அதிக உற்-பத்தியால், மாநில அளவில் விலை இல்லை என்ற பிரச்னை உள்-ளது. இயற்கை விவசாயம் மூலம் மா உற்பத்தி செய்தால், நாங்கள் சான்றிதழ் தருவதுடன், சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறோம்.

வேளாண் இணை இயக்குனர் தமிழ்செல்வி: மாங்காய், மாம்-பழம் அதிகம் உற்பத்தியானால், உங்கள் உறுப்பினர் அட்டை-யுடன் உழவர் சந்தை வந்து விற்கலாம். டி.ஏ.பி., உரம் வாங்கும்-போது வேறு உரம் வாங்க நிர்பந்திக்கும் கடையை தெரிவித்-தால்தான் நடவடிக்கை எடுக்க இயலும்.

பொதுவாக கூறினால் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும். அவ்-வாறு இருந்தால் என்னை, 94433 49728 என்ற எண்ணிலும், அந்தந்த வட்டார வேளாண் அலுவலகத்திலும் புகார் செய்யலாம்.

இவ்வாறு விவாதம் நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us