Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வன கோட்டங்களில் குறைதீர் கூட்டம் நடத்த வலியுறுத்தல்

வன கோட்டங்களில் குறைதீர் கூட்டம் நடத்த வலியுறுத்தல்

வன கோட்டங்களில் குறைதீர் கூட்டம் நடத்த வலியுறுத்தல்

வன கோட்டங்களில் குறைதீர் கூட்டம் நடத்த வலியுறுத்தல்

ADDED : ஜூன் 28, 2025 04:12 AM


Google News
ஈரோடு: ஈரோடு கலெக்டர் கந்தசாமி தலைமையில், நேற்று வேளாண் குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்ட விவாதம் வருமாறு:

பழங்குடியினர் மக்கள் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் குணசே-கரன்: ஈரோட்டில் வனத்துறை சார்பில் குறைதீர் கூட்டம் நடக்கி-றது. சத்தி, ஆசனுார் வனக்கோட்டங்களில் நடத்துவதில்லை. இங்கு நடக்கும் கூட்டங்களுக்கு கூட, அக்கோட்ட அதிகாரிகள் வருவதில்லை. வனம் சார்ந்த குறைகளை தெரிவிக்க முடிய-வில்லை.கீழ்பவானி விவசாயிகள் சங்க செயலர் நல்லசாமி: தென்னையை தாக்கும் வெள்ளை ஈக்கான ஒட்டுண்ணி வழங்க வேண்டும்.

கலெக்டர்: வனத்துறையினரிடம் பேசி, முறையாக குறைதீர் கூட்டம் நடத்தவும், கூட்டத்துக்கு வனத்துறையினர் வரவும் நடவ-டிக்கை எடுக்கப்படும்.

தோட்டக்கலை துணை இயக்குனர் குரு சரஸ்வதி: தென்-னையை தாக்கும் வெள்ளை ஈயை கட்டுப்படுத்த, 1,000 ெஹக்-டேருக்கு வழங்கும் வகையில் ஒட்டுண்ணி உற்பத்தி செய்யும் பணி விரைவில் துவங்கி வழங்கப்படும்.

தென்னைக்கான நுண்ணுாட்டம்பரப்பு விரிவாக்க திட்டத்தில், 200 ெஹக்டேருக்கு வழங்கப்படும். தேவையான விவசாயிகள் தோட்டக்கலை துறையை அணுகி பெறலாம்.

ஊரக உள்ளாட்சி துறை அலுவலர்: சாக்கடை கழிவுகளை நீர் நிலைகளில் விடக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. 'சோக் பிட்' அமைத்து ஆங்காங்கு தேக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்-ளது.

திடக்கழிவு மேலாண்மை, ஒவ்வொரு பஞ்.,களிலும் மேற்கொள்-ளப்படுகிறது. பெருந்துறை உட்பட பல உள்ளாட்சிகளில் மக்கும் குப்பை உரம் தயாரித்தும், மண்புழு உரமாக தயாரித்தும் விவசா-யிகளுக்கு விற்கப்படுகிறது.

ஊரக உள்ளாட்சிகளில் துாய்மைப்பணி செய்ய, 700 தற்காலிக துாய்மைப்பணியாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குப்பைகளை சேகரித்து எடுத்து செல்ல, 750 வண்டி வாங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

இவ்வாறு விவாதம் நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us