/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 'தவறு நடக்கவில்லை என கூறவில்லை; கவனத்துக்கு தெரிந்ததும் நடவடிக்கை' 'தவறு நடக்கவில்லை என கூறவில்லை; கவனத்துக்கு தெரிந்ததும் நடவடிக்கை'
'தவறு நடக்கவில்லை என கூறவில்லை; கவனத்துக்கு தெரிந்ததும் நடவடிக்கை'
'தவறு நடக்கவில்லை என கூறவில்லை; கவனத்துக்கு தெரிந்ததும் நடவடிக்கை'
'தவறு நடக்கவில்லை என கூறவில்லை; கவனத்துக்கு தெரிந்ததும் நடவடிக்கை'
ADDED : ஜூன் 28, 2025 04:13 AM
ஈரோடு: ஈரோடு கலெக்டர் கந்தசாமி தலைமையில், வேளாண் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.
இதில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராஜ்குமார் பேசியதா-வது:
ஈரோடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தின் கீழ், கடந்த ஐந்து மாதங்களில் பல ஆலைகளில் ஆய்வு செய்து, 21 சாய, சலவை ஆலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, இரு ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
10.33 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எங்களை தவிர, மாசுகட்டுப்பாட்டு வாரிய பறக்கும் படை அதிகாரிகள், இரவு நேரம் உட்பட பல்வேறு நேரங்களில் சோதனை செய்து வருகின்றனர்.
மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலகத்தில், 2.6 கோடி ரூபாய் நிதி இருந்தது. அதில் காளிங்கராயன் வாய்க்காலை ஒட்டிய பேபி மெனால் சீரமைப்புக்கு, 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. முன்பு, 129 சாய ஆலைகள் செயல்பட்டன. தொடர் நடவடிக்-கையால் தற்போது, 90 ஆலைகளே செயல்படுகின்றன. தோல் ஆலைகள், 24 இயங்கின.
தற்போது, 16 மட்டுமே இயக்கத்தில் உள்ளன. நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்வதுடன், புகாரின் பேரிலும் நடவடிக்கை எடுக்கிறோம்.
தவறு நடக்கவில்லை என கூறவில்லை. எங்கள் கவனத்துக்கு தெரிந்ததும் நடவடிக்கை எடுக்கிறோம். இவ்வாறு பேசினார்.