/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ரூ.25.12 லட்சத்துக்கு உழவர் சந்தைகளில் காய்கறி விற்பனைரூ.25.12 லட்சத்துக்கு உழவர் சந்தைகளில் காய்கறி விற்பனை
ரூ.25.12 லட்சத்துக்கு உழவர் சந்தைகளில் காய்கறி விற்பனை
ரூ.25.12 லட்சத்துக்கு உழவர் சந்தைகளில் காய்கறி விற்பனை
ரூ.25.12 லட்சத்துக்கு உழவர் சந்தைகளில் காய்கறி விற்பனை
ADDED : ஜூன் 17, 2024 01:40 AM
ஈரோடு: ஈரோடு மாவட்ட உழவர் சந்தைகளுக்கு நேற்று வரத்தான, 65.81 டன் காய்கறிகள் ரூ.25.12 லட்சத்துக்கு விற்றது.
ஈரோடு மாவட்டத்தில் சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய ஆறு இடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. விடுமுறை தினமான நேற்று காய்கறிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தைக்கு வரத்தான, 25.41 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள், ஒன்பது லட்சத்து, 63 ஆயிரத்து, 723 ரூபாய்க்கும், மாவட்டத்தில் உள்ள ஆறு உழவர் சந்தைகளுக்கும் வரத்தான, 65.81 டன் காய்கறிகள் 25 லட்சத்து, 12 ஆயிரத்து, 385 ரூபாய்க்கு விற்றது. மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளுக்கு 9,632 வாடிக்கையாளர்கள் வந்தனர்.