Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/560 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை சுதா மருத்துவமனையில் சிகிச்சை

560 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை சுதா மருத்துவமனையில் சிகிச்சை

560 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை சுதா மருத்துவமனையில் சிகிச்சை

560 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை சுதா மருத்துவமனையில் சிகிச்சை

ADDED : ஜூன் 17, 2024 01:39 AM


Google News
ஈரோடு,: ஈரோடு சுதா மருத்துமனையில், 560 கிராம் எடையுடன் பிறந்த பெண் குழந்தை, மருத்துவர்களின் தீவிர சிகிச்சை மூலம் தற்போது, 6.50 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு, பெருந்துறை சாலையில் சுதா பல துறை மருத்துவமனை உள்ளது. இங்கு திருப்பூர் மாவட்டம், காங்கயத்தை சேர்ந்த திருமணமான இளம் பெண் மகப்பேறு சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அப்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், இரட்டை குழந்தைகள் உள்ளதாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில், 2023 மார்ச், 30ம் தேதி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு, சுதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆறு மாதத்திலேயே பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது, பெண்ணுக்கு சுகபிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தது. இதில் ஒரு குழந்தை இறந்த நிலையிலேயே பிறந்தது. மற்றொரு குழந்தை, 560 கிராம் எடையுடன் பிறந்தது. இதையடுத்து தாய், சேய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்

பட்டது.

இதில், குழந்தைக்கு மட்டும் மூச்சு திணறல் பிரச்னை இருந்ததால் வெண்டிலேட்டர் உதவியுடனும், ஆக்சிஜன் சிலிண்டர் மூலமாகவும் சிகிச்சை அளித்து வந்தனர்.

மேலும், 200 நாட்களுக்கு மேலாக தொடர் சிகிச்சையும், அதன்மூலம் குழந்தைக்கு தேவையான புரதச்சத்து, கொழுப்பு சத்து போன்றவை வழங்கப்பட்டதால், தற்போது குழந்தை, 6.50 கிலோ எடையோடு, மூளை வளர்ச்சியுடன் உள்ளதாக சுதா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் சுதாகர் மற்றும் சிகிச்சை அளித்த டாக்டர்கள் ரங்கேஷ், கவுரி சங்கர் ஆகியோர்

தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us