மின்வாரிய ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்
மின்வாரிய ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்
மின்வாரிய ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்
ADDED : ஜூன் 17, 2024 01:40 AM
ஈரோடு: மின் வாரிய ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் வரும், 19 காலை 11:00 மணிக்கு ஈரோடு ஈ.வி.என். சாலை மின்வாரிய ஆய்வு மாளிகையில் நடக்கிறது.
ஈரோடு மண்டலம் மற்றும் அதன் பகுதியில் உள்ள பிற மின் வாரிய அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மின் வாரிய அலுவலர், பணியாளர்களின் குறைகளை நேரில் கேட்கவும், மனுக்களை பெறவும், உடனடியாக தீர்த்து வைக்கவும், உரிய ஆலோசனை வழங்கவும் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்
பட்டுள்ளது.
இக்குழுவினர் ஒவ்வொரு காலண்டிற்கு ஒரு முறை, ஈரோடு மண்டல அலுவலகத்தில் கூடி மின் வாரியத்திலிருந்து ஓய்வு பெற்ற அலுவலர், பணியாளர்களின் குறைகளை நேரில் கேட்கவும், மனுக்களை பெறவும், உரிய நிவாரணம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 2024ல் இரண்டாம் காலாண்டிற்கான மின் வாரிய ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் வரும், 19 காலை, 11:00 மணிக்கு ஈ.வி.என். சாலை மின் வாரிய ஆய்வு மாளிகையில் நடக்க உள்ளது.